தத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி!
Minister Anbil mahash Condemn to CPIM
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை தெரிந்துகொள்ளாமலேயே, கண்டன அறிக்கை வருகிறது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் என்ன பேசினேன் என்பதை உறுதிப்படுத்தாமல் கண்டனத்தை தெரிவித்தவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்தே சோர்வாகிவிட்டேன். அரசுப் பள்ளிகளை தத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Anbil mahash Condemn to CPIM