175 மில்லியன் டாலருக்கு வங்கியை ஏமாற்றிய பெண் தொழிலதிபர்: 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள அமெரிக்க நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி ஜவிஸ் என்ற 33 வயதுடைய பெண், ‘ஃபிராங்க்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 

இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது நிறுவனத்தை 175 மில்லியன் டாலருக்கு ஜேபி மார்கன் சேஸ் வங்கிக்கு விற்பனை செய்துள்ளார்.  அப்போது, தனது நிறுவனத்திற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக போலியான தரவுகளைச் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால், அந்த நிறுவனத்திற்கு 03 லட்சத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களே இருந்துள்ளனர். இந்த மோசடியை செய்வதாக அவர், 18,000 டாலர் கொடுத்து தரவு விஞ்ஞானி ஒருவரின் உதவியுடன் போலி வாடிக்கையாளர் பட்டியலை அவர் உருவாக்கியது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சார்லி ஜவிஸ் குற்றவாளி என  கடந்த மார்ச் மாதம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கில் மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, சார்லி ஜவிஸுக்கு 85 மாதங்கள் (சுமார் 7 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளதோடு, 22.4 மில்லியன் டாலரை அரசிடம் ஒப்படைக்கவும், ஜேபி மார்கன் வங்கிக்கு 287.5 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

குறித்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு அதிகாரியான ஆலிவர் அமருக்கு அக்டோபர் மாதம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன், தெரானோஸ், எஃப்.டி.எக்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவன மோசடி வழக்குகளின் வரிசையில் இந்த வழக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A US court has sentenced a businesswoman to 7 years in prison for defrauding a bank of 175 million dollers


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->