வைகோ கட்சியில் வாரிசு அரசியல் உச்சம்! துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி பரபரப்பு கடிதம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுகவில் முளைத்துள்ள வாரிசு அரசியலை கண்டித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரர் வைகோவிற்கு, அக்கட்சியின் அவை தலைவர் துரைசாமி கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

துரைசாமியின் இந்த கடிதம் குறித்து வைகோ அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த இரண்டு வருடமாக வராத துரைசாமி ஒரு கடிதம் கொடுக்கிறார் என்றால், அது நல்ல நோக்கத்திலா இருக்கும்?

கட்சியில் 99.99 சதவீத நபர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. துரைசாமிக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருக்கலாம். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் நல்ல உணர்வு இருக்கிறது. 

கடந்த முப்பது வருடமாக நாங்கள் போராடி வந்து விட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் கடந்து செல்வதற்கு தயாராக இருக்கிறோம். இதையும் கடந்து செல்வோம்.

துரைசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. சிலவற்றை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம், சிலவற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஜனநாயகம் முறைப்படி நாங்கள் கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்" என்று வைகோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வைகோவுக்கு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். 

இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். எனவே துரைசாமியை அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Vaiko issue one more letter


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->