ஆணுக்கு நிகராக, துணிச்சலாக மேயர் பிரியா தொங்கிட்டு வந்துள்ளார் - திமுக அமைச்சர் விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை மேயர் பிரியா ஒரு துடிப்பில், ஆணுக்கு நிகராக, துணிச்சலாக காரில் தொங்கிட்டு வந்ததாக, அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

சென்னை, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தாவது, "திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது எந்த அசம்பாவித சம்பவமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. 

அரசின் முன்னெச்சரிக்கை பணிகளால்  தீபத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆண்டவன் முன் அனைவரும் சமம். கோயில்களில் விஐபிக்களுக்கான அட்டை வழங்குவதை தற்போது குறைத்து இருக்கிறோம்.

முன்பு மகர தீபம் காண 15 ஆயிரம் பேருக்கு விஐபி அட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் பிரியா முதல்வரை காண ஒரு துடிப்பில் இது போன்று நடந்துள்ளார். ஆணுக்கு நிகர் பெண் என்ற பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் அந்த நாளில், மேயர் பிரியா துணிச்சலாக முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் சென்றார். இதனை தேவையில்லாமல் ஊடகங்கள் தான் பெரிதுபடுத்திவிட்டன" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayor priya issue sekar babu press meet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->