தமிழ்நாடு சிறக்கட்டும் தம்பி...! - முதலமைச்சர் விஜய்க்கு 'உலக நாயகன்' கமல்ஹாசன் உளம் கனிந்த வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழக வெற்றிக்கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழா, அரசியல் வரலாற்றில் முக்கிய தருணமாக அமைந்தது.

5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்ததால், நேரு அரங்கம் முழுவதும் உற்சாகக் குரல்கள் முழங்கின.முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தம்பி விஜய் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மேலும் வளம் பெற்று, புதிய சாதனைகளின் உச்சியை எட்டட்டும்.

அவருக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

May Tamil Nadu prosper brother World Hero Kamal Haasan heartfelt wishes Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->