மே நாள் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும் - CM ஸ்டாலின் வாழ்த்து!
May Day CM Stalin and DyCM Udhayanidhi Stalin wish
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், "உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
உழைப்பாளர்களுக்காக மே நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே நாள் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளை திமுக ஆட்சிதோறும் அண்ணா, கலைஞர் செய்து வந்தனர். அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலடத்திட்டங்களைச் செய்து வருகிறது.
உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! அதற்கு இந்த மே நாள் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும்.
துணை முதல்வர் உதயநிதி விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், "மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்! உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள். உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.
கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்!
English Summary
May Day CM Stalin and DyCM Udhayanidhi Stalin wish