திடீர் பரபரப்பு.. கைதாக போகும் அதிமுக முன்னாள் அமைச்சர்.? கலக்கத்தில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சொத்துக்களை குவித்த அமைச்சர்களை கட்டம் கட்டி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தது லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனையானது நடைபெறுகிறது.

கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ரெய்டில் சிக்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து தற்போது கே.பி.அன்பழகனும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be ex minister kp anbalagan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->