திமுகவில் இணைந்த கையோடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்! - Seithipunal
Seithipunal


முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், இன்று காலை திடீர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆலங்குளம் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. வேட்பாளராக 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக சால்வை அணிவித்து ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மனோஜ் பாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, சபாநாயகர் எம்.அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.

அவரது இந்த நடவடிக்கை, ஆலங்குளம் தொகுதியிலும் அ.தி.மு.க.விலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கணிப்புகள் கிளம்பி உள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manoj Pandian Ex ADMK MLA joint to DMK And Resign MLA post


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->