டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!
Magalir urimai thogai laptop scheme Anbil Mahesh
திருச்சியில் 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மகளிர் உரிமைத் தொகை:
பெண் முன்னேற்றம்: இத்திட்டம் தேர்தலுக்காகக் கொண்டுவரப்பட்டது அல்ல; பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான கருவி. ரூ.1,000 என்பது அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
வெற்றி: இத்திட்டம் மற்ற மாநிலங்களிலும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதே இதன் மாபெரும் வெற்றி.
பொருளாதார வளர்ச்சி: திராவிட இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களால்தான் மாநிலம் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
தொடரும்: விமர்சனங்கள் வந்தாலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சியே தொடரும்; இத்திட்டமும் தடையின்றித் தொடரும்.
மடிக்கணினி விநியோகம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்குவது தொடர்பான டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டன. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
English Summary
Magalir urimai thogai laptop scheme Anbil Mahesh