மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு! திமுகவினரே குற்றவாளிகள்! 12 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு!
madurai dinakaran office fire case
திமுகவின் அடுத்த வாரிசு யார் என தினகரன் பத்திரிக்கை கருத்துக்கணிப்பு நடத்த , மதுரை தினகரன் அலுவலகம் திமுக ஆதர்வலர்களால் கொளுத்தப்பட்டது.
'அழகிரி என்ற ரவுடிதான் மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்தான்' என்று சன்டிவியின் கலாநிதி மாறன் சொல்ல, இந்த பிரச்சனை அப்போது திமுகவில் மிகபெரும் சலசலப்பை உண்டாக்கியது. அவர்களின் குடும்ப சண்டையில் அப்பாவியாக மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள்.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயிட்டுக் கொளுத்தியதில் 3 பேர் பலியானார்கள். இதை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றத்தை செய்த இவர்கள் யாரும் தற்போது திமுகவில் இல்லை.
English Summary
madurai dinakaran office fire case