அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
Kallazhagar has arrived at Azhagar Temple The publics enthusiastic reception
அழகர்கோவிலுக்கு வருகை தந்த பகவான் கள்ளழகருக்கு பொதுமக்கள் வண்ண மலர்களை தூவி வரவேற்றனர்.அப்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10-ம் தேதி கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். இதையடுத்து 11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை செய்யப்பட்டு மறுநாள் மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் தீர்த்தவாரியில் எழுந்தருளிய கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அப்போது ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து மே 13ல் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம், பூப்பல்லத்தில் எழுந்தருளல், இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.
தொடர்ந்து கடச்சனேந்தல், காதக்கிணறு, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார். அப்போது வண்ண மலர்களை தூவி பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றதுடன் கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றியும், 21 திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் பகவானுக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது.
English Summary
Kallazhagar has arrived at Azhagar Temple The publics enthusiastic reception