அமைதி பேச்சு வார்த்தையில் ஒரு நிபந்தனை வைக்கப்படும்...!- பாகிஸ்தான் பிரதமர்
One condition placed peace talks Pakistani Prime Minister
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, கடந்த மே 10 ஆம் தேதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இருந்தாலும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார்.
இதை பஞ்சாப் மாகாணத்திலுள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
One condition placed peace talks Pakistani Prime Minister