பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
You can apply by requesting a common symbol Election Commission Announcement
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு 2026- இல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை கட்சிகள் தொடங்கி விட்டன.தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் 2026 மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்பட 5 மாநில தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கும் பொதுச்சின்னம் கோரி வருகிற 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
You can apply by requesting a common symbol Election Commission Announcement