பாஜக பெண் நிர்வாகி கொலை! 3 பேர் சரண்... கொலைக்கான காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
Madurai BJP Saranya Murder case
பட்டுக்கோட்டை அருகே பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி சரண்யா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான சரண்யா, மதுரையைச் சேர்ந்தவர். அவரது முதல் கணவர் சண்முகசுந்தரம் 2021ல் மரணம் அடைந்த பின்னர், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலனுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அய்யனார் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை இரண்டாவது கணவன் பாலனுடன் இணைந்து நடத்தினார்.
இந்த நிலையில், நேற்று இரவு, கடையை மூடி, பாலன் தனது இருவரும் மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டார். பின்னர், தனியாக நடந்துசென்ற சரண்யா, வீடு அருகே உள்ள சந்திப்பில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவருடைய கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் வெட்டியதால், தலை துண்டிக்கப்பட்டு, அவர் உயிரிழந்தார்.
வாட்டாத்திகோட்டை போலீசார் சம்பவ இடத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்த நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Madurai BJP Saranya Murder case