என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்!
Online registration for engineering courses begins today
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் . செயல்பட்டுவருகின்றன.இந்த என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பி.பிளான் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்துக்கு அதிகமான இடங்கள் உள்ளன. இதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்சேர்க்கை தொடங்க இருக்கிறது.2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை புதன்கிழமை காலை தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்க வளாகத்தில், நடைபெறும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நடப்பு கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் வருகிற 9-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Online registration for engineering courses begins today