ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை - ஆடிப்போன இல்லத்தரசிகள்.!
6 5 2025 today gold and silvar price
தினமும் தங்கம் விலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அதற்கு காரணம் திடீரென தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதும் தான். இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை 10 மணி நேர நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதாவது மாலை நேர நிலவரப்படி கிராம் ஒன்று ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கும், பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் இன்று மாலை விலை உயர்ந்ததில் ரூ.72,800 ஆக அதிகரித்து காணப்படுகிறது. இது அனைவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 5 2025 today gold and silvar price