இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
two days local holiday to theni district for temple festival
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மே 9 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு திருவிழா வரும் மே 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டும் வரும் மே 12 ஆம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இரு விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 உள்ளிட்ட இரண்டு தேதிகள் முழு வேலை நாட்களாக செயல்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
two days local holiday to theni district for temple festival