தமிழகத்தில் மொழி மற்றும் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை நினைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி..!
Tamilisai thinks that creating divisions in Tamil Nadu due to language and religion can cool down during the election seasonMinister Sekarbabu response
தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதலமைச்சர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பதிலளித்து கூறியதாவது:-
தமிழ்நாடு இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி, தீவிரவாதத்திற்கு எப்போது முதலமைச்சர் துணை போக மாட்டார் என்றும், தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அவர் அடக்குவார் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் சிலர் விஷம கருத்துக்களை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழ்நாடு இடம் தராதுஎன்று பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன் தமிழ்நாட்டில், இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதர சகோதரிகளாக உள்ளனர் என்றும், மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைக்கிறார் என்றும், அவருக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் தமிழ்நாட்டில் நடக்காது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilisai thinks that creating divisions in Tamil Nadu due to language and religion can cool down during the election seasonMinister Sekarbabu response