வரும் 11 ஆம் தேதி மதுபானக் கடைகள் செயல்படாது - ஆட்சியரின் அறிவிப்பால் மதுபிரியர்கள் அதிர்ச்சி.!
coming 11 tasmac shop closed in sengalpat district
வருகிற 11ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"வருகிற 11ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 11 tasmac shop closed in sengalpat district