நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும்...! - மத்திய அரசு
Free treatment provided to those injured road accidents across country Central Government
மத்திய அரசு,"நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும்" என அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை நேற்று அதாவது மே 5 முதல் பின்பற்றப்படுகிறது.
மேலும் இதில் குறிப்பிட்டதாவது,"இந்த விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் .
சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Free treatment provided to those injured road accidents across country Central Government