இந்திய ரெயில்வே துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in indian railway
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை இங்குக் காண்போம்.
சம்பளம்:- மாதம் ரூ.19,900/-
வயது வரம்பு:- 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், https://www.rrbchennai.gov.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை தொடங்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி தேதி: 9 மே 2025.
English Summary
job vacancy in indian railway