பொங்கல் பரிசால் திமுக அமைச்சர்களுக்கு சிக்கல்.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகப்பில் இடம் பெற்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் பல்வேறு முறை கேடுகள் நடந்ததாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டது தொடரப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி புகாரை ரத்து செய்து உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் மீதான பொங்கல் பரிசு முறைகேடு புகாரை மீண்டும் விசாரிக்குமாறு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC directs Lokayukta to reinvestigate Pongal package case against DMK ministers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->