சூடு பிடித்த தமிழக தேர்தல் களம்.. இன்று முதல் தொடக்கம்.!!
local body election nomination starts today
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி ஒரேகட்டமாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி தொடக்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியும், பிப்ரவரி 7ஆம் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. ஆகையால், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
local body election nomination starts today