தன் உயிரை தியாகம் செய்த வாஞ்சிநாத வீரனின் திருநாளை நினைவூட்டுவோம்...! - நயினார் நாகேந்திரன்
Let us remember day of Vanchinatha Veeran who sacrificed his life Nainar Nagendran
பா.ஜ.க. மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.
வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்! "என்று பதுவிட்டுள்ளார்.மேலும், வாஞ்சிநாதன் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி நினைவு கூறுகின்றனர்.
English Summary
Let us remember day of Vanchinatha Veeran who sacrificed his life Nainar Nagendran