மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் தொடர்வோம்...! - டிடிவி தினகரன்
Let us continue path shown MGR man three letter mantra TTV Dhinakaran
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து பின் வருமாறு:பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனியாக, ஏழை–எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி, கொடையும் கருணையும் அரசியலாக்கிய மகத்தான தலைவர்.
உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களின் அடையாளமாகத் திகழ்ந்த ஒப்பற்ற அரசியல் ஆளுமை. மக்கள் செல்வாக்கை மாபெரும் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழக வளர்ச்சிக்காக தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களின் மூலம் சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.
தனது பேச்சாற்றல், சிந்தனைத் திறன், நிர்வாகக் கூர்மை ஆகியவற்றால் தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர்த்திக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அந்த மகத்தான தலைவன் காட்டிய பாதையில், மக்கள் நலன், சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னெடுத்து, எந்நாளும் பயணிக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Let us continue path shown MGR man three letter mantra TTV Dhinakaran