முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் பரபரப்பான கடைசி நிமிடங்கள்?! நன்றி தெரிவித்து உருக்கமான பேச்சு!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

தற்போது நடைபெற்று வரும் அரசுக்கு  ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சராக இருந்த இருவரும்  ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு பாஜகவைப் ஆதரவளிக்க தயார் ஆனார்கள். இதனை எடுத்து அவர்கள் இருவர் வீட்டின் முன்புறமும் கடுமையான கலவரம் உருவானது. பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். 

தற்போது சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி ஏறக்குறைய தன்னுடைய இறுதி உரையை வாசித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு, உருக்கமான ஒரு உரையை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். ஆதலால் அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கலவரம் எதுவும் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் அடுத்த 48 மணி நேரம் 144 தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மது கடைகளும் மூடப்படும்,  மது பார்களையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

சட்டசபையில் பேசி வரும் குமாரசாமி, "நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின் பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார்" என பேசினார். 

மேலும் இந்த சட்டசபை பல உதாரணமான நிகழ்வுகளை கொண்டது, பெருந்தலைவர்கள் இந்த அவையில் மாண்போடு நடந்துகொண்ட நிகழ்வுகளை நான் சிறுவனாக பொதுமக்களோடு அமர்ந்து பார்த்து வளர்ந்தவன் என்றும், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் எனவும்,  நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன், எனது ஆட்சியில் பங்குகொண்டு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தலை தாழ்ந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

பாஜக நான் ஆட்சிக்கு வந்தது முதல் எனக்கு எதிராக அதிக நெருக்கடிகளையே உருவாக்கிவிட்டது. என் மீது ஊழல் புகார்களையும் தெரிவிக்கறது. இதே பாஜக ஆதரவுடன் தான் நான் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து எடியூரப்பாவிற்கு வழிவிட்டேன். நான் ஒருபோதும் துரோகம் செய்தது இல்லை என தொடர்ந்து பேசி வருகிறார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumarasamy Speach in assembly


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal