'தவெகவுடன், அதிமுக இணையும் என ஆதவ் அர்ஜுனா பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'; கே.பி.முனுசாமி எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


திமுக, விசிக, அதிமுக என வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் ஓடியவர் தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அவர் பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கலந்துக்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ஜாம்பவான்தான் என்று, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட, விஜய்பாஸ்கர் போன்றவர்கள் தான் கட்சியை விட்டுச் சென்ற ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள் என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், திமுக, விசிக, அதிமுக என வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் ஓடியவர் தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்றும், தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அவர் பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கரூர் சம்பவத்தில் 'ஒரு கணக்கு இருக்கிறது' என பேசி உள்ளார். ஆட்சியில் அமர்ந்து கொண்டு காவல்துறையை மிரட்டி வருகிறார் என்று விமர்சித்துள்ளதோடு, கரூர் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு காவல்துறையினரை மிரட்டி, இந்த வழக்கை நீர்த்து போகச் செய்யலாம் என முயற்சி செய்கிறார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எல்லா கட்சிகளையும் உடைக்க முயற்சி செய்கிறதாகவும், நியாயம் கேட்டு ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள். அதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக அமைச்சர், எம்எல்ஏ மீது புகார் எழுந்தபோது நடவடிக்கை எடுக்காத முதல்வர், ஜனநாயக முறைப்படி, விமர்சனம் செய்த எம்எல்ஏ-வை கைது செய்ய உத்தரவிட்டுள்ளமை பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் தெரிவித்துள்ளதாவது; அதிமுகவின் 02-ஆம் கட்ட தலைவர்கள் பனையூர் கேட்டின் முன்பு நின்று கேட் எப்போது திறக்கும்? என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு, பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவது போல், ஓடிச் சென்று பார்க்கும் தலைவர் புஸ்ஸி ஆனந்த்தான். அக்கட்சியின் தலைவரைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்திருந்தால், இவர்களுக்கு அங்கே அமைச்சர் பதவி கிடைக்காது, அங்கு நுழைய முடியாது. ஆனால், தவெக தொண்டர்கள் இல்லாத கட்சி, ரசிகர் மன்றம் போன்ற கட்சி. நாம் போய் அதை ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம் என்றும், பதவியை பிடித்துக் கொள்ளலாம் என்கிற நப்பாசையில் சிலர் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு மரியாதை இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முதல்வர் விஜய், சினிமா போன்று அமைச்சரவையில் தனக்கு வேண்டியவர்களை உட்கார வைப்பது, தவறான முன் உதாரணம் என்று விமர்சித்துள்ளார். அத்துடன், அரசு தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் முறையாக செயல்படவில்லை என்றால், தன்னிடத்தில் மனு வழங்குங்கள் என ஆளுநர் சொல்வதில் தவறில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அதிமுக பழனிசாமி, திமுக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது, எந்த நேரத்திலும் அவர்களை சந்தித்து பேசும் நிலை இருந்தது. ஆனால், முதல்வர் விஜய்யை மாலை 05 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்று சாடியுள்ளார். மேலும், அப்படிப்பட்ட முதல்வரை நாம் தேர்வு செய்துள்ளோம். காலம் தான் இதற்கு பதில் சொல்லும். விஜய்யின் நடவடிக்கையால், தொடர்ந்து 05 ஆண்டுகள் இந்த ஆட்சி நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KP Munusamy warns that legal action will be taken if Adhav Arjuna says that AIADMK will merge with TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->