பிஹாரில் பங்கிபூர் இடைத்தேர்தலில் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்: பாஜக - ஜன் சுராஜ் கட்சிக்கு இடையில் நேரடி போட்டி..?
Prashant Kishor to contest Bankipur by election in Bihar
பிஹாரின் பங்கிப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் சுராஜ் கட்சி 2025-ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் இறங்கிய நிலையில், அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. ஜன் சுராஜ் கட்சி, வெறும் 3.34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
அதற்கு அந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடாதது, கட்சியின் படுதோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பங்கிப்பூர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முதன்முறையாக போட்டியிடுவதாக ஜன் சுராஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரியமான கோட்டையாகத் திகழும் பங்கிப்பூர் தொகுதியில் வென்ற பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் களமிறங்குவதால், பங்கிப்பூர் தொகுதியில் பாஜக மற்றும் ஜன் சுராஜ் கட்சிக்கு இடையில் நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்கிப்பூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 06-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ல் நிறைவுபெறஉள்ளது. பின்னர் வாக்குப்பதிவு ஜூலை 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 03-ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Prashant Kishor to contest Bankipur by election in Bihar