#தமிழகம் || ஊராட்சிக்கு வந்த பணத்தை தனது வங்கி கணக்கில் மாற்றிக்கொண்ட ஊர் பிரசிடண்ட் பதவி காலி.! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் சர்மிளா ஜி. இவர் ஊராட்சிக்கு வந்த நிதி 10 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாயை, 2020 ஆம் ஆண்டு தனது வங்கி கணக்கு மாற்றியுள்ளார். 

இது குறித்து கிராம மக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், முறைகேடு நடந்தது உறுதி ஆனதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kottaimedu village head dismissed


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->