'வெளியே வர தைரியம் இல்லை; ‘Chief Minister Sir’ என குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா..?' விஜய்யை விமர்சித்த கி.வீரமணி..!
Ki Veeramani criticized Vijay asking if he would change the government if he called him Chief Minister Sir
சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியதோடு, இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது, விழாவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டுக்கான நினைவு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆவண புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த விழாவில் தலைமை தங்கி பேசிய கி.வீரமணி, 'சுயமரியாதை கொள்கையோடு கடமை-கன்னியம்-கட்டுப்பாடு என்று அண்ணா தந்த கோட்பாட்டோடு கலைஞர் வழிநின்று மக்களுக்காக ஒய்வின்றி உழைத்து வரும் மின்சாரம் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின். அந்த மின்சாரத்தை இப்போது புதிதாக வரும் மின்மினி பூச்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது.'என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த பூச்சிகளை நம்பிக் கொண்டு எந்த சந்தர்ப்பமாவது கிடைக்காதா.? என வடக்கே இருந்து வந்தவர்கள் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள் என்று மத்திய அரசையும் விமர்சித்துள்ளார்.
மேலும், நீங்கள் ஆழம் பார்க்க நினைத்தால் பெரியார் மண் உங்களை மூடிவிடும் என்றும், ‘Chief Minister Sir’ என குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா..? என தவெக விஜய்யையும் சாட்டியுள்ளார். அத்துடன், இன்றைக்கு உங்களுக்கு (விஜய்க்கு) வெளியே வர தைரியம் இல்லை என்றும், (தவெக) உங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி நீதிமன்றம் தோலை உரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டுள்ளார். இந்த ஆட்சிக்கு (திமுக) சவால் விடுகிறீர்களா..? கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது என்று எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
English Summary
Ki Veeramani criticized Vijay asking if he would change the government if he called him Chief Minister Sir