'பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்களை தாரைவார்க்கும் காங்கிரஸ்': கோவாவில் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!
Kejriwal accuses Congress in Goa of handing over MLAs to BJP
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மற்றும் கட்சியின் கோவா பொறுப்பாளர் முன்னாள் டெல்லி முதலமைச்சர் அதிஷியும் 03 நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று பேசும் போது கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக கோவாவில் சட்டவிரோத கட்டுமானம், சட்டவிரோத சுரங்கம் தோண்டுதல், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக குற்ற விகிதம், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாவாசிகளின் வருகை சரிவு கண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: கோவாவில் எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித கூட்டணியும் கிடையாது என கூறியுள்ளதோடு, அக்கட்சி கோவா மக்களை அதிகளவில் ஏமாற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 17 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், காங்கிரசின் 13 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாகவும், 2022-ஆம் ஆண்டில், பா.ஜ.க.வில் கூடுதலாக 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணையமாட்டார்கள் என அவர்களால் உறுதியளிக்க முடியுமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்த அளவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அனுப்புகிறது என குற்றம் சுமத்தியுள்ளதாகவும், கோவாவில் பா.ஜ.க. அரசு அமைக்க உதவுவதற்கு நாங்கள் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Kejriwal accuses Congress in Goa of handing over MLAs to BJP