சிறுமி பாலியல் கொலை குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்: மீண்டும் 07 வயது சிறுமியை சீரழித்து கொடூர கொலை..! - Seithipunal
Seithipunal


பாலியல் கொலை வழக்கில் கைதாகி இருந்த கொடூரன் ஒருவன் காவல்துறை பிடியிலிருந்து தப்பிய மீண்டும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 06 வயது சிறுமியை சீரழித்து, கொலை செய்த வழக்கில் கைதான நபர், இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது  அவன் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளான். 

இந்நிலையில், வேறு ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அறை எடுத்துத் தங்கிய அந்த நபர், தனது பக்கத்து வீட்டில் வசித்த 07 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அத்துடன் அந்த சிறுயின் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளார்.

அதன்  பின்னர் தனது சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை அதே இரவில் மடக்கிப் பிடித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், காவல்துறையின் பெரும் அலட்சியத்தையும், வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. நீதிமன்றக் காவலில் இருந்த ஒரு கொலை குற்றவாளி எப்படி தப்பிச் சென்றான் என்பது குறித்து, அவரை அழைத்துச் சென்ற காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், தப்பிச் சென்ற குற்றவாளிக்கு முறையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு இன்றி வாடகைக்கு அறை கொடுத்த வீட்டு உரிமையாளர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder convict who escaped from police custody again brutally murders 7 year old girl


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->