ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி..! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சனே தகைச்சி, அந்நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஜப்பான் நாட்டின் ஆளும் கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். 248 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில் நடைபெற்றது.

அதன்படி, பெரும்பான்மைக்கு 125 இடங்கள் தேவை. ஆனால, ஆளும் எல்டிபி கட்சி 122 இடங்களில் வென்றது. முன்னதாக கடந்தாண்டு அக்டோபரில் நடந்த பாராளுமன்ற கீழ்சபை தேர்தலில் எல்.டி.பி., கட்சி பெரும்பான்மையை இழந்திருந்தது. இந்த பின்னடைவுக்கு கட்சி தலைவர் ஷிகெரு இஷிபா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமராக பதவியேற்று ஓராண்டு முடிவதற்குள் ஷிகெரு இஷிபா பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க 295 எம்பிக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் 05 பேர் போட்டியிட்டனர். இதில், முன்னாள் முன்னாள் பொருளாதார பாதுகாப்புத்துறை அமைச்சர், 64 வயதான சனே தகைச்சி வெற்றி பெற்று LDP கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ளார்.

கட்சி தலைவரே பிரதமராகவும் இருப்பார் என்பதால், வரும் அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பிரதமராக அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanae Takaichi is the first female Prime Minister of Japan


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->