அரசு பஸ் மீது பைக் மோதியதில் இருவர் துடிதுடித்து பலி; குலசேகரப்பட்டினம் திருவிழாவிற்கு சென்று திரும்புகையில் விபரீதம்..! - Seithipunal
Seithipunal


துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி அருகே ஆவுடையாள் புரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 21), ரஞ்சித் (18), பாரத்(18) ஆகிய 03 பேர் மாலை அணிந்து கோவிலுக்கு சென்றுள்ளனர்.

மூவரும் திருவிழா முடிந்ததும் ஒரே பைக்கில் நேற்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது வண்டியை குருமூர்த்தி ஓட்டியுள்ளார். குறித்த அந்த பைக் மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பிய போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மீது பைக் மோதியத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பைக்கில் வந்த 03 பேரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் குருமூர்த்தி, ரஞ்சித் ஆகிய 02 பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பாரத் திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two youth died in an accident when a bike carrying youths returning from the Kulasekaranpattinam festival collided with a government bus


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->