பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் கைது..! - Seithipunal
Seithipunal


துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில்  இயங்கி செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் பழகியுள்ளத்தோடு, மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் பள்ளியில் காட்டுத்தீ போல பரவிய நிலையில், இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் கணித ஆசிரியர் மணிகண்டனை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில் மணிகண்டனால் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு நிலையில், பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்களை குறித்த மாணவியை பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இத கேட்டு அதிர்ச்சியடைந்த இதுகுறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவி ஆசிரியர் மணிகண்டன் தான் கர்ப்பத்திற்கு காரணம் எனக்கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் மணி கண்டம் மீது புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.  மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளதோடு, இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Math teacher arrested under POCSO Act for impregnating schoolgirl in Srivaikundam area


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->