பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் கைது..!
Marxist Communist branch secretary arrested for sexually harassing school student
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுநகரம் அருகே வாரியத்கலம் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஷாஜி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக அங்கம் வகித்துள்ளார். அத்துடன், கொடுவாயூர் பகுதியில் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று 10-ஆம் வகுப்பு மாணவன் ஷாஜியின் கடைக்கு ஜெர்சி வாங்கி சென்றுள்ளான். அப்போது அந்த மாணவனுக்கு ஷாஜி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் புதுநகரம் காவல் நியலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஷாஜியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, ஷாஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Marxist Communist branch secretary arrested for sexually harassing school student