விஜய் அதை செய்திருக்க வேண்டும்... செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!
Karur Stampede TVK vijay DMK Senthilbalaji
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, சம்பவம் தொடர்பான விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.
அவர் தெரிவிக்கையில், “கரூரில் நடந்த இந்த துயரத்தை அரசியலாக்குவது தவறு. 41 பேரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பவம் நடந்த உடனே முதல்வர் நேரில் வந்து மக்களை ஆற்றினார். கரூர் மக்களுக்கு துணையாக நின்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.
கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தக் கட்சி சார்ந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு உதவியது குறிப்பிடத்தக்கது” என்றார்.
கடந்த சனிக்கிழமை வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டத்தில், விஜய்யைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 9 குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்துக்குப் பிறகு, த.வெ.க. நிர்வாகிகள், ஆளும் திமுகவினர் மின்சாரத்தை துண்டித்ததால்தான் நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karur Stampede TVK vijay DMK Senthilbalaji