விஜய் ஹீரோ மனநிலையில் இருந்து வெளியே வாங்க.. நடிக்காதீங்க..விஜயை விட்டு விளாசிய சாட்டை துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து அரசியல் விவாதங்களை எழுப்பி வருகிறது.

மூன்று நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் தனது வீடியோவில் உணர்ச்சிகரமாகப் பேசினார். ஆனால் அதில் மன்னிப்பு கேட்காதது குறித்து பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் விஜயை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சாட்டை துரைமுருகன், தனது அறிக்கையில் விஜயை நேரடியாக விமர்சித்துள்ளார்:

“ஹீரோ மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள் விஜய்!காலை 12 மணிக்கு வருவதாக அறிவித்துவிட்டு மாலை 7 மணிக்குத்தான் கரூர் வந்தது ஏன்?மக்கள் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் காத்திருந்ததை தெரியாதா?

ஆயிரக்கணக்கான பெண்கள் இயற்கை உபாதைக்கு கூட வசதி இல்லாமல் எட்டு மணி நேரம் நின்றனர் என்பதை அறியவில்லையா?காவல்துறை மாலை 5 மணிக்கே கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தும், பிடிவாதமாக உள்ளே சென்றது ஏன்? 5 மணிக்குப் பிறகு உங்களை பார்க்க வந்த பெரும் கூட்டத்தினரை புறக்கணித்து பேருந்துக்குள் சென்றது ஏன்?

உங்கள் தவறுகளை மறைத்து மூன்று நாட்கள் கழித்து வீடியோ வெளியிட வெக்கமில்லையா?தைரியம் இருந்தால் ஊடக சந்திப்பை உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ நடத்தலாமே!

நீதிமன்றத்தில் ஏற்பட்ட சங்கடத்தை மறைக்க, நேற்று எடுத்த வீடியோவை அழித்துவிட்டு எடிட் செய்து புதிய வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்.நடிக்காதீர்கள் விஜய்!”

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:“கேடுகெட்ட அயோக்கியன்!மனச்சாட்சி உனக்கே இருக்கிறதா?பிணத்தின் மேல அரசியல் செய்யக்கூடாதே!கரூரில் பாதிக்கப்பட்ட மக்களோடு நீங்கள் நின்றதே இல்லை.உங்கள் கட்சியிலிருந்து ஒருவர்கூட மருத்துவமனைக்குப் போய் பார்வையிடவில்லை.அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறாமல் எங்கே போனீர்கள்?”

மூன்று நாட்கள் கழித்து வெளியிட்ட விஜயின் வீடியோவில்,“என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்ததில்லை… மனதில் வலி மட்டுமே உள்ளது” என்று கூறினார்.கரூரில் நடந்த சம்பவத்திற்கு தவெக தரப்பில் எந்தத் தவறும் இல்லை என வலியுறுத்தினார்.“முதலமைச்சர் பழி வாங்க விரும்பினால் என்னை குறி செய்யுங்கள்; தொண்டர்களை பாதிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

ஆனால், மன்னிப்பு கோராதது, மற்றும் சம்பவத்திற்குப் பிறகு கரூருக்கு திரும்பிச் செல்லாதது போன்ற விஷயங்களை எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கரூர் துயரச் சம்பவம் குறித்து அரசியல் குற்றச்சாட்டுகள் தீவிரமாகி வரும் நிலையில்,தவெக நிர்வாகிகள் மீதான வழக்குகள்,நிகழ்ச்சி அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை,மற்றும் பல்வேறு கட்சிகளின் கண்டனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay should get out of his hero mentality donot act Durai Murugan lashed out at Vijay


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->