அந்த 2 ஆம்புலன்ஸ்... விஜய்க்கு கூடிய கூட்டம்... செந்தில்பாலாஜி விளக்கம்! - Seithipunal
Seithipunal


கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அதில், "கூட்ட நெரிசலின் போது த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்குள் சென்றதால், அங்கு ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விஜய் பிரசார பேருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கும் 500 மீட்டர் முன்னரே சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜயின் கவனத்தை ஈர்க்க த.வெ.க. தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தலைவர்கள் பொதுவாக வாகன முன்சீட்டில் அமர்ந்து மக்கள் மீது கை அசைப்பது வழக்கமானது. ஆனால் விஜய் வந்ததும் அவரது வாகனத்தின் முன்புற லைட்கள் அணைக்கப்பட்டன. இது, “எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன்?” என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

மேலும், மக்கள் தண்ணீர் கேட்டபோது, கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் திமுகவினர் தங்களிடம் இருந்த பாட்டில்களை வழங்கினர். காவல்துறையின் ஆலோசனையை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றிருந்தால் இத்தகைய விபத்து நடந்திருக்காது.

நாமக்கல்லில் இருந்து விஜயின் பேருந்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. ஆனால் திமுக சார்ந்த எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்தில் செல்லவில்லை. கூட்டநெரிசலில் சிக்கியவர்களுக்கு உதவ த.வெ.க. தொண்டர்கள் முன்வராததே கவலைக்குரியது. கூட்டத்தில் திரண்டது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் தான் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK senthil balaji Karur Stampede TVK Vijay


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->