விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
Karur Stampede TVK Vijay
தமிழக வெற்றிக் கழக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.