கவனத்தை ஈர்க்க விஜய் மீது செருப்பு வீசப்பட்டிருக்கலாம்... செந்தில்பாலாஜி விளக்கம்!
Karur Stampede TVK Vijay DMK MK Stalin Senthilbalaji
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர், கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவம் தொடர்பாக விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்தார். அப்போது, விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக எழுந்த கேள்விக்குப் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது: “சம்பவம் நடந்த மறுநாளில் நிகழ்விடம் 2,000-க்கும் மேற்பட்ட செருப்புகள் கிடந்தன. ஆனால், ஒரு காலி தண்ணீர் பாட்டில்கூட எவரும் காணவில்லை. விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டிருக்காது. கூட்டம் நடத்தும்போது, எத்தனை பேர் வருவார்கள் என்று கணித்து, அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்வது அரசியல் கட்சியின் பொறுப்பு.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேரில் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரசு தனது கடமையை முழுமையாகச் செய்துள்ளது. ஆனால், தவெகவினர் தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை. யாரேனும் பாதிக்கப்பட்டால், அரசு அவர்களுக்கு துணை நிற்கும்.
விஜய் பேச்சு தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. ஆனால், என் பெயரை அவர் 16-வது நிமிடத்தில்தான் சொன்னார். எனவே, என்னை குறிக்கோளாகக் கொண்டு செருப்பு வீசப்பட்டதாக பரப்புவது தவறானது. மக்கள் கவனத்தை ஈர்க்க சில தொண்டர்களே செருப்பு வீசியிருக்கலாம். உண்மையில், மக்கள் மயங்கி விழுந்த இடத்திலிருந்து தான் முதல் செருப்பு எறியப்பட்டது” என்றார்.
English Summary
Karur Stampede TVK Vijay DMK MK Stalin Senthilbalaji