கர்நாடகா: பாஜக எம்.பி.யை தோற்கடித்த 26 வயது இளம் சிங்கம் .. சாகர் ஈஷ்வர் காந்த்ரே..!!
Karnataks 26 year old Candidate Sagar Eshwar Kandre
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 17 இடங்களை வென்றுள்ளது. மேலும் காங்கிரஸ் 9 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வென்ற 9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மிகவும் இளம் வயது வேட்பாளரான சாகர் ஈஷ்வர் காந்த்ரே போட்டியிட்டு வென்றுள்ளார். இவரது வயது 26.
இவர் இரண்டு முறை எம். பி. யாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த பாஜகவின் பகவந்த் குபாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக சாகர் ஈஷ்வரின் தந்தை ஈஷ்வர் காந்த்ரே 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இதே பகவந்த் குபாவிடம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 834 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் தந்தையின் தோல்விக்கு பழி வாங்கும் விதமாக தற்போது சாகர் ஈஷ்வரின் இந்த வெற்றி அமைந்துள்ளது.

இதையடுத்து சாகர் அளித்த பேட்டியில், "வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அதிகளவில் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
எம். பி. யாக எனது முதல் திட்டமே இந்த மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் தான். இனி வரும் நாட்களில் மக்களை நேரிடையாக அணுகுவேன். என்னால் முடிந்ததை செய்வேன். மாநிலத் தலைமை தான் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.
சமீபமாக காங்கிரசில் ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு வந்து கிராம பஞ்சாயத்து முதல் நிறைய வெற்றி பெற்றுள்ளனர்" என்று சாகர் ஈஷ்வர் காந்த்ரே கூறினார்.
English Summary
Karnataks 26 year old Candidate Sagar Eshwar Kandre