ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக சேர்ந்து வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் கழக தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில அதிமுக கழக செயலாளராக எஸ்.டி குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், " கர்நாடக மாநில கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்த எஸ்.டி குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 

இவர் கர்நாடக மாநில கழக செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் எஸ்.டி குமார் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் அதிமுக கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் " அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

முன்னதாக கர்நாடக மாநில கழக செயலாளர் பொறுப்பில் இருந்த யுவராஜ், சசிகலா சிறையில் இருந்து பின்னர் தனியார் விடுதியில் தங்கியிருந்த சமயத்தில், அவரை சென்று சந்தித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த பொறுப்பிலிருந்து யுவராஜ் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த பதவியை தற்போது காலியாக இருந்த நிலையில், கர்நாடக மாநில கழக செயலாளராக எஸ்.டி குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை இல்லாமல் இருந்த அதிமுக கர்நாடக மாநில தொண்டர்கள், கழக செயலாளர் நியமனத்தால் உற்சாகமாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka SD Kumar appointed AIADMK secretary Karnataka State


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal