அந்த துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்திருக்கலாம்! கொடூர கொலை... கொந்தளிக்கும் பாஜக நாராயணன்! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறான் ஒரு சிறுவன்.

பெங்களூருவில் உள்ள அரகேரே பகுதியை சேர்ந்த நிஸ்சித் என்ற 8வது படிக்கும் சிறுவன் ஒருவனை கடந்த நேற்றைய முன் தினம் இரவு கடத்தி சென்று நேற்று கொலை செய்திருக்கிறார்கள் இரு நபர்கள்.

அந்த சிறுவனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றதோடு, காவல் துறையிலும் புகார் கொடுத்திருந்த நிலையில், அந்த சிறுவனை பென்னர்கட்டா அருகே  அடித்து துன்புறுத்தி எரித்து கொன்றிருக்கின்றன அந்த மனித மிருகங்கள். 

இந்த குற்றத்தை செய்தது அந்த சிறுவனின் தந்தையிடம் ஓட்டுநராக பணியாற்றிய குருமூர்த்தி மற்றும் அந்த நபருக்கு உதவிய கோபிகிருஷ்ணா ஆகிய இருவர். இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து பிடிக்க சென்ற காவல்துறையினரை தாக்க முற்பட்ட போது சுட்டுப் பிடித்திருக்கின்றனர் காவல்துறையினர்.

காலில் குண்டுகள் பாய்ந்த நிலையில்  இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவன் என்றும் பாராமல் கொடூர செயலில் ஈடுபட்ட இருவரின் காலில் பாய்ந்த குண்டு நெஞ்சிலேயே பாய்ந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் கண்காணிக்கப்படுகிறோம், கவனிக்கப்படுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்  என்பதையும், நம்மை சுற்றி இருப்பவர்களிடத்தில் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதையும் இந்த கொடூர சம்பவம் உணர்த்துகிறது. மற்றவர்களின் காதுகள் நமக்கு ஆபத்தாக முடியும் வகையிலான நம் பேச்சுக்களை, செயல்களை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் 'பணம், பணம்' என்று அலையும் இந்த உலகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சிறுவனின் பெற்றோருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று நாராயணன் திருப்பதி.தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka child murder BJP Narayanan condemn


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->