வெளியானது கர்நாடக தேர்தல் முன்னிலை நிலவரம்! அதிர்ச்சியில் இருக்கும் கட்சிகள்!
Karnataka By election leading results
கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பறிகொடுக்குமா? என்ற உச்ச கட்ட பரபரப்பில் இருந்த பாஜகவிற்கு ஆரம்ப கட்ட முடிவுகள் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை, மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து அமைத்து, ஆட்சி அமைத்தன. அதிருப்தி எம்எல்ஏக்கள் உருவானதால், போதிய பலமின்றி ஆட்சி கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு 106 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 34 இடங்களும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு இடமும் ஆக மொத்தம் 207 இடங்கள் இருக்கிறது.
இதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக வெளியேறியவர்கள் 17 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த 17 தொகுதிகளில் தற்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க முடியுமா? என்ற உச்ச கட்ட பரபரப்பில் கர்நாடக பாஜக இருந்தது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி 15 தொகுதிகளில் யாரும் எதிர்பாராத விதமாக, பாரதிய ஜனதா கட்சி 11 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும், மூன்று முன்னணி கட்சிகளின் போட்டிகளின் இடையே அதனையும் மீறி ஹோஸ்கோட் என்ற தொகுதியில் சுயேச்சை ஒருவரும் தற்போதைய முன்னிலையில் இருந்து வருகிறார்கள்.
பாஜக ஆட்சியை தக்கவைக்க ஆறு தொகுதிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 11 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றிருப்பது பாஜக கட்சியையினர் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வசமிருந்த தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் மேற்பட்ட பின்னடைவானது அக்கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
English Summary
Karnataka By election leading results