இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்​ஷிப் 2026; இறுதிப்போட்டி சென்னைக்கு அருகில்..! - Seithipunal
Seithipunal


சென்னை டர்போ ரைடர்​ஸ், ஜேகே டயர் இணைந்து இந்​திய தேசிய கார் பந்தய சாம்​பியன்​ஷிப்பை அறி​முகம் செய்துள்​ளது. இதன் முதல் சுற்று கோவை​யில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்​வே​யில் வரும் செப்​டம்​பர் 11 முதல் 13 வரை நடை​பெற உள்ளது.

தொடர்ந்து இதே பகு​தி​யில் இதன் 02-வது சுற்று அக்​டோபர் 23 முதல் 25 வரை நடத்​தப்​படவுள்ளது. தொடர்ந்த 03-வது சுற்று வரும் நவம்​பர் 13 முதல் 15 வரை பெங்​களூரு​வில் நடத்தப்படவுள்ளது.

இறு​திச் சுற்று வரும் டிசம்​பர் 11 முதல் 13 வரை சென்னைக்கு அரு​கிலுள்ள இருங்​காட்​டுக் கோட்​டை​யில் உள்ள மெட்​ராஸ் இன்​டர்​நேஷனல் சர்க்​யூட்​டில் நடை​பெறவுள்ளதாக போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். அத்துடன் இந்த போட்​டிகள் அனைத்​தும் நேரடி​யாக ஒளிபரப்பு செய்​யப்படவுள்​ளது.

மேலும், சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்தில்தெற்கு ரயில்வே 3-2 என்ற கோல் கணக்​கில் இந்​தி​யன் வங்கி அணியை வீழ்த்தியது.

தெற்கு ரயில்வே அணி சார்​பில் சண்​முகம் 02 கோல்களும், கோபிந்த் படேல் ஒரு கோலும் அடித்​தனர். அடுத்து மற்​றொரு ஆட்​டத்​தில் எஸ்​டிஏடி 4-2 என்ற கோல் கணக்​கில் வரு​மானவரித் துறை அணியை தோற்​கடித்​தது. எஸ்​டிஏடி அணி தரப்​பில் கிருஷ்ணன் 02 கோல்​களும் கவுதம், அரவிந்த் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The final of the Indian National Car Racing Championship will be held near Chennai


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->