உலக புகைப்பட தினத்தில் சுவாரஸ்ய திருப்பம்... புகைப்படக் கலைஞர்களையே படம் எடுத்த முதலமைச்சர் விஜய்...!
Interesting twist World Photography Day Chief Minister Vijay takes pictures photographers
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. காலத்தை கடந்து நினைவுகளைப் பாதுகாக்கும் புகைப்படக் கலையின் சிறப்பையும், அதன் வரலாறு மற்றும் வளர்ச்சியையும் போற்றும் வகையிலும், புகைப்படத் துறையில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வரும் கலைஞர்களை கவுரவிக்கும் நோக்கிலும் இத்தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1839-ம் ஆண்டு பிரான்சைச் சேர்ந்த லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோரால் ‘டேகுயரோடைப்’ எனப்படும் புகைப்பட முறையானது உருவாக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்சு அரசு இந்த முறைக்கான உரிமையைப் பெற்றதுடன், புகைப்படக் கலையின் வளர்ச்சியில் அந்த ஆண்டை முக்கியமான தொடக்கக் கட்டமாகக் கருதியது.
புகைப்படத் தொழில்நுட்பம் வளர வளர, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், வரலாற்றுச் சம்பவங்கள், மனிதர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் இயற்கையின் அழகு உள்ளிட்டவற்றை ஒரே நொடியில் பதிவு செய்யும் வலிமை புகைப்படக் கலைக்கு கிடைத்தது.
முதன்முறையாக 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி உலக அளவில் இணையவழிக் காட்சிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை நினைவுகூரும் முக்கிய நாளாக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கொண்டாடப்பட்ட உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடியதுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர் உற்சாகமாகப் பங்கேற்ற இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
Interesting twist World Photography Day Chief Minister Vijay takes pictures photographers