தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பூர்விக சொத்து மதிப்பீடு பூஜ்ஜியம்: சட்டசபையில் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு..!
SP Velumani alleges in the Assembly that the property valuation in Thondamuthur constituency is zero
''தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும்'' என்று அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.
இது குறித்து நேற்று தமிழக சட்டப்பேரவையில்நேரமில்லா நேரத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேசும் போது கூறியதாவது;

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு, இருட்டுபள்ளம், நரசிங்கபுரம், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊர்நத்தம் பூர்வீக சொத்து பூஜ்ஜிய மதிப்பீடாக தவறாக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் சொத்தை விற்கவோ வாங்கவோ முடியவில்லை என்றும், இதற்காக தாலுகா அலுவலகம் சென்றால் காலதாமதம் ஆகிறது. எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இப்பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
SP Velumani alleges in the Assembly that the property valuation in Thondamuthur constituency is zero