ரூ.20 லஞ்ச வழக்கில் எதிர்பாராத திருப்பம்... 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2 அரசு ஊழியர்களுக்கு விடுதலை...! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சப் புகாரை மையமாகக் கொண்டு தொடங்கிய வழக்கு சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த நிலையில், இறுதியாக இரு அரசு ஊழியர்களுக்கும் உச்சநீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.இந்த வழக்கின் தொடக்கம் 1996-ம் ஆண்டைச் சேர்ந்தது. குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் வருமானச் சான்றிதழ் பெறுவதற்காக வருவாய் அதிகாரியை அணுகியதாக கூறப்படுகிறது.

அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, பெச்சிரி கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுப்பப்பட்டது.அப்போது வருமானச் சான்றிதழை வழங்குவதற்காக ரூ.120 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதில் ரூ.100 தனக்காகவும், மீதமுள்ள ரூ.20 அலுவலக உதவியாளருக்காகவும் வழங்க வேண்டும் என கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.

லஞ்சம் வழங்க விரும்பாத புகார்தாரர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தகவல் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.20 நோட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவலர்கள், அந்தப் பணத்தைப் பெற்றதாக கூறப்படும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்தனர்.இந்த வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்தது.

பின்னர் இந்தத் தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர், புகார்தாரர் கூறிய லஞ்சக் கோரிக்கை தொடர்பான வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினர்.

லஞ்சம் கோரப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முதலில் அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் கோரிக்கை உறுதியாக நிரூபிக்கப்படாத நிலையில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றத்தை உறுதி செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இரு அரசு ஊழியர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.வெறும் ரூ.20 லஞ்சப் பணத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த வழக்கு, பல்வேறு நீதிமன்றங்களைக் கடந்து சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்துள்ளது.

1996-ம் ஆண்டு தொடங்கிய இந்த நீண்ட சட்டப் போராட்டத்துக்கு தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தேவையான சட்டரீதியான ஆதாரங்கள் உறுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unexpected twist 20 bribe case 2 government employees released after 30 years


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->