திமுகவின் முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகை, அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதேபோல், நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏ.எம்.எச்.நாஜிம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARAIKKAL dmk candidate affected corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal